Dharmapuri

News May 7, 2024

சின்னகுப்பம் வலிப்பு நோயினால் வாலிபர் பலி

image

அரூர் அடுத்த சின்ன குப்பம் அருகே இன்று (07/05/2024) மாலை அரூரிலிருந்து கோபிநாதம்பட்டி நோக்கி வந்த வாலிபர் வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கோபிநாதம்பட்டி காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

image

மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,“+2 முடித்து மேற்படிப்பு பயில்வோர்களை பொறியியல், நர்சிங், கலை (ம) அறிவியல், பாலிடெக்னிக் ஆகிய படிப்புகளில் தனியார் கல்லூரிகளில் நேரடியாக சேர்த்துவிடுகிறோம். கட்டணம் அனைத்தும் இலவசம், விடுதி கட்டணம் செலுத்தினால் போதும் என ஏமாற்றும் நோக்கில் ஆசை வார்த்தைகளை கூறும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்

News May 7, 2024

தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளை

image

தர்மபுரி அருகே மொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சாந்தி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கழிவறை செல்வதற்காக வெளியே வந்தபோது 2 நபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 47 ஆயிரம் பணம் மற்றும் சாந்தியின் கழுத்திலிருந்த 7.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் . இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்
விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

தருமபுரி: வேலை செய்யும்போது உயிரிழந்த சோகம்!

image

தருமபுரி வட்டம் குண்டலபட்டி அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக நேற்று(மே 6) மாலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மாரியப்பன் என்பவரை இறந்த நிலையிலும், மற்றொரு நபரை காயங்களுடனும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 7, 2024

தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று தருமபுரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

தருமபுரியில் தேர் திருவிழா

image

தருமபுரி அடுத்து இண்டூர் அருகே நத்தஅள்ளி கிராமத்தில் இன்று (6.05.2024) ஶ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேர் திருவிழாவில் மேளதாளங்களுடன் கொண்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News May 6, 2024

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பாலக்கோடு மாணவி

image

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருதி, 600 க்கு 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சங்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.

News May 6, 2024

தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

தருமபுரி: 5 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

image

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாதிரி பள்ளி, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேகாரஹள்ளி அ.மே.நி.பள்ளி, நத்தமேடு அ.மே.நி.பள்ளி, அரூர் அருகே நரி பள்ளியில் உள்ள பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகள் 12ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தின் படி தமிழ்நாடு அளவில் தருமபுரி 25வது இடத்தை பிடித்துள்ளது.

News May 6, 2024

தருமபுரி: 17,228 மாணவ மாணவிகள் தேர்ச்சி!

image

தருமபுரி மாவட்டத்திலிருந்து +2 தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவிகள் -18,416; தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகள் – 17,228; தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,904; மாணவர்கள் தேர்ச்சி – 8,161; தேர்வு எழுதிய மாணவிகள் – 9,512; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,067; மாணவர்கள் சதவிகிதம் – 91.66%; மாணவிகள் சதவிகிதம் மொத்தம் – 96.32% என மொத்தம் 93.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

error: Content is protected !!