India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஜூன்.12) குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் காவல் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கு இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வது, தொலைந்து போன செல்போனை கண்டறிவது குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி; தமிழ்நாடு திறன் மே.கழக வழிகாட்டுதலின்படி தென்னிந்தியா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tn textiles.tn.gov.in/jobs/என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை செய்து பயன்பெற கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது பிரேதத்தை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்றவராக இருந்துள்ளார்.அவரை இன்று (ஜூன் 13) மாலை சேலம் இருப்புப்பாதை காவலர் அருள்குமார், மை தருமபுரி அமரர் சேவை சார்பாக முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி சாலையின் இடையே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 800 மீட்டர் மண் சாலையை ஜல்லி தார்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என சட்டமன்ற உறுப்பினர், கூடுதல் ஆட்சியர், வனத்துறை, வருவாய் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இன்று (ஜூன் 12) நேரடியாக கள ஆய்வு செய்தார்.
இன்று(ஜூன் 12) தர்மபுரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 & 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியினை பெற https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்யலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் (இன்று ஜூன் 12) நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தசையது முகைதின் இப்ராகிம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அருண்மொழித்தேவன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரூர் – சேலம் நெடுஞ்சாலையில் சுக்கம்பட்டி அருகே இன்று(ஜூன் 12) ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி ஒன்றின் பின்னால் 2 பைக்குகளில் 4 பேர் சென்ற நிலையில், லாரி நின்றபோது பின்னால் அதிவேகமாக வந்த சண்முகா என்ற தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் இருந்த 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளியில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டைமற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட் நிறுவனம் நிறுவ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நேற்று(ஜூன் 12) பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்க உள்ளது. அதற்கு சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தருமபுரி கலெக்டர் சாந்தி இன்று ஜூன் 11 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.