Dharmapuri

News January 31, 2026

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பயிற்சி

image

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://application.tnbocw.com. இணைய வழி பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

தருமபுரி: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

தருமபுரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

தருமபுரி: கரண்ட் கட்? Whatsapp-ல் எளிய தீர்வு!

image

தருமபுரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

தருமபுரியில் மின் தடை; உங்கள் ஏரியா இருக்கா!

image

காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காரிமங்கலம், கெரகோட அள்ளி, அனுமந்த புரம், தும்பல அள்ளி, பேகரஅள்ளி, கொட்டுமாரனஅள்ளி, மாட்டலாம்பட்டி, குப்பாங்கரை, சப்பானிபட்டி, பேகரஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

News January 31, 2026

ALERT: தருமபுரி மின் தடை தேதிகள் வெளியீடு!

image

தருமபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான உத்தேச மின் நிறுத்த பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இதில் அதியமான்கோட்டை: 5-ம் தேதி, வெள்ளிச்சந்தை: 5-ம் தேதி, அருர் 7-ம் தேதி, இலக்கியம்பட்டி 7-ம் தேதி, சோகத்தூர் 7-ம் தேதி மற்றும் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, காரிமங்கலம் என அனைத்து ஊராட்சிகளுக்கும் மின்தடை தேதி வெளியாகி உள்ளது.

News January 31, 2026

தருமபுரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

image

தருமபுரியில், வாடகைக்கு குடியேற்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

தருமபுரி: தூக்கி வீசப்பட்டு பலி!

image

டி.ஆண்டியூரை சோ்ந்தவர் பெருமாள். இவா் நேற்று (ஜன.30) தீா்த்தமலைக்கு நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி பெருமாள் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, கோட்டப்பட்டி போலீசார் பெருமாளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

News January 31, 2026

தருமபுரியில் கொலை மிரட்டல்; பெண் நிர்வாகி அதிர்ச்சி!

image

கல்கூடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (37). இவர் விவசாய தொழில் சங்க மாநில குழு உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27-ந் தேதி இரவு இவருக்கும். பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சக்திவேல், பாண்டியம்மாளை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 31, 2026

தருமபுரி: தூக்கில் தொங்கி துடிதுடித்து பலி!

image

எர்ரப்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் (20). இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்த நிலையில் 28-ந் தேதி மாலை வெகு நேரமாகியும் இவரது வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளது. உறவினர்கள் வந்து பார்த்த போது மின்விசிறியில் மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பெரும்பாலை போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News January 31, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!