Dharmapuri

News January 29, 2026

சின்னப்பெருமன் ஏரி புணரமைக்கப்பட்டு, ஆட்சியர் சதீஷ் ஆய்வு

image

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதனஅள்ளி ஊராட்சியில் ஏரி புணரமைத்தல் நிதி-2024-2025ன் கீழ் சின்னப்பெருமன் ஏரி புணரமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைத்து, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (ஜன.29) மாலை 3 மணி அளவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நல்லம்பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 29, 2026

நல்லம்பள்ளி சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சதீஷ் ஆய்வு

image

நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (ஜன.29) மாலை 3 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம் மற்றும் மருந்தகம், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, ஆட்சியர் சதீஷ் ஆய்வு செய்தார்.

News January 29, 2026

தருமபுரி: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தருமபுரி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு<>, Aadhaar மொபைல் ஆப்பை <<>>அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

தருமபுரி: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News January 29, 2026

தருமபுரி: இனி ரேஷன் கடை அல்ல; 1 SMS போதும்!

image

தருமபுரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். உடனே SHARE பண்ணுங்க.

News January 29, 2026

தருமபுரி: திமுக இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம்!

image

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக சமனூர் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த எல்.மணிவண்ணன் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.29) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து துணை அமைப்பாளராக பொறுப்பேற்றவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

News January 29, 2026

தருமபுரியில் மின் தடை; உங்கள் ஏரியா இருக்கா?

image

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று (ஜன.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 முதல் பகல் 9 மணி வரை மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, கீரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News January 29, 2026

தருமபுரியில் நாளையே கடைசி நாள்!

image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க திருத்தப் பணிகள் நாளை (ஜன.30) முடிவடைகின்றது. மேலும் அடுத்த மாதம் 17ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் வாக்காளர் திருத்தம் சேர்த்தல் போன்ற பல்வேறு பணிகளை உடனடியாக மேற்கொண்டு பயன் பெறலாம் .

News January 29, 2026

தருமபுரி: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும் மெசேஜ் வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612, HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. SHARE IT.

News January 29, 2026

FLASH: தருமபுரியில் கோர விபத்து; 2 துடிதுடித்து பலி!

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் அருகே இன்று ஜனவரி 29 அதிகாலை 4 மணி அளவில் 2 வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. தடங்கம் ஏற்பட்ட இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரிதும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!