Dharmapuri

News February 4, 2026

தருமபுரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த <<>>இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

தருமபுரி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

தருமபுரி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 4, 2026

தருமபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்!

image

தருமபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News February 4, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உடனே SHARE IT.

News February 4, 2026

தருமபுரியில் மூதாட்டியிடம் துணிகரம்!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிகாடை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் (பிப்.2) முள்ளிக்காடு மலை அடிவாரத்தில் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர், மூதாட்டியை கீழே தள்ளி காதில் அணிந்திருந்த நகையை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

ALERT: தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

அதியமான் கோட்டை மற்றும் வெள்ளி சந்தை துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. வெண்ணாம்பட்டி, அதியமான் கோட்டை, HPCL, ஏலகிரி, நாகர்கூடல், நீதிமன்ற வளாகம், சாமிசெட்டிபட்டி பரிகம், நல்லம்பள்ளி, பாளையம்புதூர், மானியதஅள்ளி, தோக்கம்பட்டி, சிவாடி, பாலகோடு சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News February 4, 2026

தருமபுரி: கிணற்றில் மிதந்த சடலம்!

image

சூடனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன். இவரது கிணற்றில் நேற்று முன்தினம் (பிப்.2) பெண் பிணம் மிதந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் அதேபகுதியை சேர்ந்த பச்சியம்மாள் (86) என்பதும், கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News February 4, 2026

தர்மபுரி : இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 3) இரவு முதல் நாளை (பிப்- 4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை ஆட்சியர் சதீஷ் ஆய்வு

image

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (பிப்.3) மாலை 4 மணி அளவில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 3, 2026

தருமபுரி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

தருமபுரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!