Dharmapuri

News November 9, 2024

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தேர்வு 

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள தருமபுரி மாவட்ட வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் வரும் ஞாயிறு அன்று கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள், போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

சுகாதார ஆலோசகர் அதிகாரி பணி வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் EMRI green health service கீழ் செயல்பட்டு வரும் 102 தாய் சேய் சேவை மையத்தில் சுகாதார ஆலோசகர் அதிகாரியாக பணி செய்ய ஆட்கள் தேர்வு நாளை 09.11.2024 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.14,000 என கூறப்பட்டுள்ளது. 

News November 8, 2024

வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மட்பாண்டம் தொழிலுக்கும்  இலவசமாக வண்டல், களிமண் எடுத்து பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், மட்பாண்டம் தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி https//tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

ஏப்ரல் 2019 முதல் மார்ச் 22, ஏப்ரல் 2020 முதல் மார்ச் 23 வரையிலான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இதற்கான படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், 11.11.24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சாந்தி கூறியுள்ளார்.

News November 8, 2024

தர்மபுரி பொறுப்பு அமைச்சர் சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம்

image

தர்மபுரி மாவட்டம் அரூர் நகரில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்க கடந்த ஆட்சியில் 2020ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே அரூரில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏற்படுத்த ஆவணம் செய்யுமாறு தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்  சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News November 7, 2024

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

image

காரிமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ சுந்தரமூர்த்தி போலீஸ் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே கோழிப்பண்ணை ஒன்றில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த காரிமங்கலம், சப்பாணிப்பட்டி, பெரியாம்பட்டி, தர்மபுரி, காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மொத்தம் 13 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

News November 7, 2024

முதல்வரின் திறனாய்வு தேர்வில் தருமபுரி சாதனை

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களின் திறனை ஊக்கு விக்க, முதல்வரின் திறனாய்வு தேர்வு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நடந்தது. தருமபுரி மாவட்டத்தில் 2556 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், மாநில அளவில் சென்னை முதலிடமும், திருவண்ணாமலை 2-ம் இடத்தையும் தருமபுரி 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

News November 7, 2024

தமிழ்நாடு சுற்றுலா அமைச்சர் தர்மபுரிக்கு வருகை

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் இன்ற்( நவம்பர் 7) தர்மபுரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்துள்ளார். இந்த சுற்றுபயணத்தின் விவரங்கள் ; காலை 11.00 வத்தல்மலை சாகச சுற்றுலா மையம் ஆய்வு செய்தல், மதியம் 1.30 க்கு டிடிசி ஹோட்டல் ஆய்வு, மதியம் 3.00 மணிக்கு ஒகேனக்கல் முத்திரை திட்டம் ஐகான் பிராஜெக்ட் ஆய்வு செய்தலில் ஈடுபடுகிறார்.

News November 7, 2024

ராபி பருவத்திற்கான விதைகள் தேவையான அளவு இருப்பு

image

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் இன்று (நவ 07) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராபி பருவத்தில் மேற்கொள்ளப்படும் நெல், ராகி, உளுந்து, நிலக்கடலை ஆகிய சாகுபடிக்கு தேவையான அளவில் அனைத்து வட்டார விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, மானிய விலையில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் விதைகளை பெற்று பயன் அடையலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News November 6, 2024

காரிமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மல்லிகுட்டை ஊராட்சி ராமியம்பட்டி அரசு மேல்நிலை ஆசிரியர் பாலாஜி 44 என்பவர் பணிக்கு சரியாக செல்லாமல் வேறு ஒருவரை வைத்து ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்ததாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, புகாரை உறுதி செய்தனர். இந்நிலையில், ஆசிரியர் பாலாஜியை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

error: Content is protected !!