India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04342-260042) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

தருமபுரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலரை (04342-233088) தொடர்பு கொள்ளவும்.

தருமபுரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<

தருமபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளராக வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் ராமசாமி கோயிலை சேர்ந்த வசந்த், சில நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிடமனேரி பகுதியை சேர்ந்த தம்பதி கோகுல் (31) அஞ்சுமாஸ்டெலஸ் (28). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோகுல் மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பெற்றோர் வீட்டுக்கு சென்ற அஞ்சுமாஸ்டெலஸை உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே அஞ்சுமாஸ்டெலஸ் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதில் கோகுலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (பிப்.17) நடைபெற உள்ளது. நல்லம்பள்ளி வட்டார வள மையத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (பிப்.16) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.10, சுரைக்காய் ரூ.6, கேரட் ரூ.38, புடலங்காய்: ரூ.20, பெரிய வெங்காயம்: ரூ.26, பீர்க்கங்காய்: ரூ.36, கத்தரிக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.12, பாகற்காய்: ரூ.35, சின்ன வெங்காயம்: ரூ.30, பச்சை மிளகாய்: ரூ.55, அவரைக்காய்: ரூ.18, தேங்காய்: ரூ 74, முட்டைக்கோஸ்: ரூ.28 என விற்பனை செய்யப்படுகின்றன.

மாரண்டஅள்ளி அடுத்த காணூரை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி கனகராஜ் (45). இவர் நேற்று (பிப்.15) காலை சந்திராபுத்தில் தேங்காய் பறிக்க சென்றார். அப்போது மரம் ஏறிய போது கால் நழுவி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் மதியம் திடீரென உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஞ்சலி என்பவர் தனது 2 வயது குழந்தை தனுஜாவுடன் பாப்பாரப்பட்டியில் தனது உறவினர் வினோத் வீட்டில் தங்கி இருந்தார். வீட்டில் தனுஜா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சூடான கறி குழம்பு இருந்த பாத்திரத்தின் மீது விழுந்தாள். இதனால் சிறுமி உடல் வெந்து அலறி துடித்தாள். பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
Sorry, no posts matched your criteria.