India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முகப்பு பக்கம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னுகின்றன. இன்று காலை தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றிய நிலையில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .
கேரள கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தர்மபுரி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செந்தில்குமார், மகாலிங்கம் மருத்துவ உதவியாளர் சிங்காரவேல், சஞ்சீவ்காந்தி உள்ளிட்டோர் சான்றிதழ் பெற்றனர். மேலும் 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் உடன் இருந்தார்.
சுதந்திர தினமான இன்று தருமபுரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் நாளை காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மக்களிடம் இருந்து மொத்தம் 81 மனுக்கள் பெறப்பட்டு 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், காவல் ஆய்வாளர்கள் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
தருமபுரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர் மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய கடனுதவி வழங்கப்படுவதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் ஆட்சியர் அலுவகலத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தர்மரபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.