Dharmapuri

News February 19, 2026

மஜக தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம்.இம்ரான் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாரூதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் ஏ.ஜெ.எஸ்.தாஜீதீன் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

News February 19, 2026

தருமபுரியில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

தருமபுரி மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

News February 19, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.19) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.14, கத்தரிக்காய்: ரூ.24, வெண்டைக்காய்: ரூ.28-30, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.65, பப்பாளி: ரூ.36, கொய்யா: ரூ.40 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News February 19, 2026

தருமபுரி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு!

image

தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. நேற்றைய பதிவில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிதல், மற்றும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் முறையற்ற பயணம் வாழ்க்கையின் இறுதி முடிவாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

News February 19, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப்.20) நடைபெற உள்ளது. அரூர் வட்டம், பாட்ஷா பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.

News February 19, 2026

தருமபுரியில் அதிரடி மாற்றம்!

image

தருமபுரியில் பஞ்சாயத்து செயலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட, 10 செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து நேற்று (பிப் .18) 30 செயலாளர்கள், நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

தருமபுரி: மாணவி துடிக்க துடிக்க பலி!

image

குமரிமடுவை சேர்ந்த +1 மாணவி பவநிஷா. கடந்த 9-ந் தேதி பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த மாணவி திடீரென வாந்தி எடுத்தார். இதனால் பெற்றோர் அவரை பொம்மிடியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தமபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விசாரணையில் வீட்டில் வேலை செய்யாமல் இருந்ததால் தாயார் கண்டித்ததால் விஷம் தின்றதாக தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

தருமபுரி; இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று காலை (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!