Dharmapuri

News December 30, 2024

தருமபுரியில் மொபைல் ஏடிஎம் வசதி துவக்க விழா

image

தருமபுரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மொபைல் ஏடிஎம் வசதி துவக்க விழா இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி எம்.பி மணி ஆகியோர் ஏடிஎம் வசதியை துவக்கி வைத்தனர். மேலும், இந்நிகழ்வில் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

News December 28, 2024

வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 48 கிராமங்கள் தேர்வு

image

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 48 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை துறை திட்டங்களாக வரப்பு பயிராக பயிறுவகை விதைகள் 1920 எக்டருக்கு விநியோகம்,என மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனம் ஏலம்

image

தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட 03 வாகனங்களை ஜன 2 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பபவுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

News December 27, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் .மலர்விழி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் .அறிவழகன், அரசுத்துறை அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

News December 27, 2024

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நேற்று முழுவதும் ஆங்காங்கே சாரல் மழை மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி அரூர் 27 மிமீ, மருதிப்பட்டி 19.6 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 9.2 மிமீ, பென்னாகரம் 1 மிமீ, ஒகேனக்கல் 2.6 மிமீ, பாலக்கோடு 7 மிமீ, தீர்த்தமலை 6.4 மிமீ, என மழை பதிவாகியுள்ளது.

News December 27, 2024

குழந்தை திருமணம் குறித்து புகார் தகவல் அளிக்கலாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதை முன்கூட்டியே கண்டறியப்பட்டு திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இது குறித்து தகவலை 1098 தெரிவிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்.

News December 27, 2024

அதிமுக ஆர்ப்பாட்டம் திடீர் ஒத்திவைப்பு

image

தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே காலை 10:30 மணிக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2024

தருமபுரியில் TNPSC-GROUP-IV இலவச பயிற்சி வகுப்புகள்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது விஏஓ, இளநிலை உதவியாளர் வனக்காப்பாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்வு 13.07.2025 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(டிச 27) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்

News December 26, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

தருமபுரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார்.  தருமபுரியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

error: Content is protected !!