India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொப்பூர் கணவாயில் நேற்று இரண்டு கார்கள் மீது லாரி மோதியதில் பெண் ஒருவர் பலியானார். தெலுங்கானாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற லாரி ஒரு வழி பாதையில் சென்றதால் எதிர் திசையில் வந்த இரண்டு கார் மீது மோதி ஒரு பெண் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்து தொப்பூர் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதாக மூன்றாயிரம் ரூபாய் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தர்மபுரி மாவட்டம் நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தர்மபுரி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப் போட்டியில் கபடி, கொக்கோ, கைப்பந்து, எரிப்பந்து, கையுந்து பந்து என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் தர்மபுரி மாவட்டம் சார்ந்தவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
கொம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பெரியண்ணன் (41). இவர் அக்கிராமத்தில் வினோத் (30) என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளார். அப்போது வினோத் அருகில் இருந்த ராடை எடுத்து பெரியண்ணனை தாக்கியுள்ளார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வினோதை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறையின் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் முதல் காஷ்மீர் லடாக் வரை உலக அமைதிக்காகவும், இந்திய ஒற்றுமைக்காகவும் இரண்டு சக்கர வாகனத்தில் தினேஷ் மற்றும் பானு தம்பதி 33 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று ஏரியூர் வருகை புரிந்த தினேஷ், பானு தம்பதியினரை ஏரியூர் காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காரிமங்கலம் அருகே முள்ளனூர் சாலையில் இன்று பந்தார அள்ளியை சேர்ந்த மாரியப்பன்(65) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காரியமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரண்டஅள்ளி அடுத்த கரிக்குட்டனூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60), நேற்று மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் போது ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகியோர் போதையில் மூதாட்டியை மது அருந்த அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் மூதாட்டியை மீட்டுள்ளனர். புகாரின் பேரில் இவர்மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், தருமபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் படிக்கும், 7,033 மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் இத்தொகையினை அவர்களது கல்வித் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பாலக்கோட்டில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 72ஆவது இன்று பிறந்தநாள் விழா மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிகள் கட்சி கொடி ஏற்றி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.