Cuddalore

News July 10, 2025

கடலூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

கடலூர் விபத்து எதிரொலி: சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தின் எதிரொலியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அனைத்து ரயில்வே கேட்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

கடலூர் மாவட்டத்தின் இன்றைய மின் தடை

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை.10) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கீழக்குப்பம், பூரங்கனி, காட்டுக்கூடலூர் சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி, வடக்குத்து, பாளையங்கோட்டை, புவனகிரி, வானமாதேவி, மதுராந்தகநல்லூர், கானூர், சோழத்தரம், குறிஞ்சிகுடி, ஓரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். SHARE !

News July 10, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (ஜூலை 9) இரவு 10 மணி முதல் (ஜூலை 10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுக்குபின் பதில் – ஆட்சியர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை தடுக்க ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அளித்த பதிலில் “தெற்கு ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆய்வுக்குப் பின் பதில் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

News July 9, 2025

கடலூர்: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 9, 2025

கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

News July 9, 2025

கடலூர்; 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

image

கடலூர் மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>https://www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம்m வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 9, 2025

செம்மங்குப்பம்: புதிய கேட் கீப்பர் நியமனம்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மொழி தெரியாதவரை தமிழகத்தில் பணியமர்த்தியது சர்ச்சையான நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த நபர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News July 9, 2025

கடலூர் ரயில் விபத்து : விசாரணையில் பகீர் தகவல்

image

கடலூர் அருகே நேற்று பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இதுபோல 5-க்கும் மேற்பட்ட முறை ரயில்வே கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளதாகவும், பணி நேரத்தில் தூங்குவதையே அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!