Cuddalore

News October 25, 2024

வேப்பூரில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

image

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் விடிய விடிய ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தை இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூ. 5ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

News October 25, 2024

பரவளூரில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

image

விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (42), வெற்றிவேல் (30), ராம்பிரகாஷ் (35), ராஜா (33), ஆதிமூலம் (37), தமிழ்மணி (32) ஆகியோர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து ஆனந்த் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று நீதிபதி விஜயகுமார், 6 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News October 24, 2024

கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 24, 2024

மணல் மூட்டைகள் கடத்திய 3 பேர் கைது

image

காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இன்று சிறுகாட்டூரில் உள்ள ராஜன் வாய்க்கால் கொள்ளிடக்கரையோரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகள் கடத்தி வந்த அல்லியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38), ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (28), கருணாகர நல்லூரை சேர்ந்த முருகன் (34) ஆகியோரை கைது செய்தனர்.

News October 24, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/ நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், 3.12.2024 அன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் 28.10.2024 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 24, 2024

வேப்பூரில் சிறுவனை தாக்கிய இளம்பெண் கைது

image

வேப்பூர் அடுத்த மாளிகைமேட்டை சேர்ந்தவர் செல்வம் மகன் அஸ்வின் (14). செல்வம் குடும்பத்துக்கும், பக்கத்தில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி பிரியா(23) குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. இந்த விரோதம் காரணமாக பிரியா, அஸ்வினை உருட்டுகட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஸ்வின், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து பிரியாவை கைது செய்தனர்.

News October 23, 2024

பட்டாசு விற்பனையை இன்று தொடங்கி வைக்கும் ஆட்சியர்

image

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் திடலின் அருகே சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (2310.2024) மாலை 6 மணி அளவில் பட்டாசு விற்பனையினை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

News October 23, 2024

பரங்கிப்பேட்டை அருகே லாரி மோதி விபத்து

image

சீர்காழி எலந்தூரை சேர்ந்த முகிலன் 33 என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி வினோதா நண்பர்கள் விஜயபாஸ்கர், பரத் கிஷோர் ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து சீர்காழி சென்றபோது, பரங்கிப்பேட்டை அருகே பெரிய குமட்டி கிலியாளம்மன் கோயில் எதிரே இன்று காலை அதே வழியில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியதில் முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேரும் உயிர் தப்பினர்.

News October 23, 2024

கடலூரில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ‘டானா’ புயலாக வலுவடைந்து பின்னர் தீவிர புயலாக மாறும். பின்னர் புயல் அக்.25ஆம் தேதி அதிகாலை ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையைக் கடக்கும். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்-23) 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது‌.

News October 23, 2024

வாலிபால் அணி வீரர்கள் வரும் 27ஆம் தேதி தேர்வு

image

கடலூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் மாவட்ட அளவில் 23 வயதுக்குட்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான அணி தேர்வு வரும் 27ஆம் தேதி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 01/01/2002 அன்றோ அதற்குப் பிறகோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம். கடலூர் மாவட்டத்தினர் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என கடலூர் மாவட்ட வாலிபால் கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!