India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாடுவதற்காக பலர் ஜவுளிகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இனிப்பு பலகாரங்களில் அதிக நிறப்பொருள் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிக நிறப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை கவனமாக வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் வரும் 31ஆம் தேதி நவம்பர் 1ஆம் தேதி இரு தினங்களும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தீபாவளி அன்று காலை மழை செய்யும் என்பதால் தீபாவளி கொண்டாடும் கடலூர் மக்கள் சற்று கலக்கத்துடன் உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு தாம்பரம் – மானாமதுரைக்கு தீபாவளி சிறப்பு ரயில் (06019) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று மானாமதுரைக்கு நாளை மறுநாள் (31/10/2024) காலை 3.45 மணிக்கு சென்றடையும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கால்நடை பராமரிப்பு செலவினை குறைப்பதில் பசுந்தீவனம் முக்கியமானது. பசுந்தீவனம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு விதைகள் இலவசமாக வழங்கப்படும். மானாவரி நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு தீவன சோளம் 12 கிலோ, தட்டைப்பயிர் 4 கிலோ விதைகள் முழு மானியத்துடன் இலவசமாக வழங்கப்படும் ஒரு விவசாயி 2 ஏக்கர் வரை பயன்பெறலாம். கால்நடை விவசாயிகள் கால்நடை நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் கடலூர் சுற்றுவட்டார மக்கள் மற்றும் கடலூர் மாநகர மக்கள் புத்தாடைகளையும் பொருட்களையும் வாங்குவதற்காக கடலூர் மாநகரில் உள்ள கடைவீதிகளில் அலைமோதுகின்றனர். பொதுமக்கள் இரு சக்கர வாகனம், கார்கள் ஆகியவற்றில் அதிகமாக பயணிக்கின்றனர். இதனால், நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராமநத்தம் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் திருஞானம் (62). இவருக்கும் இவரது மனைவி அமுதாவுக்கும் (58) இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த திருஞானம் இன்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினம் தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.,28) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சண்முகம், நெய்வேலி உதவி ஆய்வாளர் கவின்நிலவன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தாழநல்லூர் ரயில் நிலையத்தில் மதுரை-விழுப்புரம் விரைவு பேசஞ்சர் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பதனை வலியுறுத்தி வரும் நவம்பர், 12ஆம் தேதி பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அக்கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.