Cuddalore

News November 19, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்த நிலையில் இரண்டு நாட்களாக பல இடங்களில் மழை இல்லை. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2024

ரேஷன் கடை ஊழியர் பணிக்கு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு

image

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 152 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முக தேர்வு 25.11.2024 முதல் 05.12.2024 வரை நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். SHARE IT 

News November 18, 2024

காட்டுமன்னார்கோயில் எஸ்.ஐ.யை கத்தியால் தாக்கியவர் கைது

image

காட்டுமன்னார்கோயில் எஸ்.ஐ. மணிகண்டன் மற்றும் போலீசார் இன்று காட்டுமன்னார்கோயில் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த வடக்கு கொளக்குடியை சேர்ந்த பக்கீர் மைதீன் (58) என்பவரை போலீஸர் பிடிக்க முயன்றபோது பக்கீர் மைதீன், எஸ்.ஐ. மணிகண்டனை அசிங்கமாக திட்டி கத்தியால் தாக்கினார். உடனே சக போலீசார் மடக்கி பிடித்து பக்கீர் மைதீனை கைது செய்தனர்.

News November 18, 2024

கடலூரில் 501 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 501 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News November 18, 2024

பெண்களுக்கு மாநில விருது: ஆட்சியர் அறிவிப்பு

image

பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், மேலும், சிறப்பான செயல்கள் மற்றும் தனித்துவமான சாதனைகள் செய்திருத்தல் போன்றவைகளில் வீரதீர செயல் புரிந்துவரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருது பெற https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.12.2024 க்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 18, 2024

கடலூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரையில் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

News November 18, 2024

வேப்பூர் அருகே விபத்து – 2 பேர் பலி

image

வேப்பூர் அடுத்துள்ள ஏ.சித்தூரில் கடலூர் – சேலம் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆருரான் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபில் ரானா (54), இருசக்கர வாகனத்தில் வந்த வேப்பூர் லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (18) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2024

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அறிவிப்பு

image

மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm//scholarship schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News November 17, 2024

கடலூர் மாவட்டத்தில் மின் நிறுத்தம்

image

கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு, நல்லாத்தூர், சிற்றரசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.18) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இப்பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

பண்ருட்டி பகுதியில் 20ம் தேதி ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

error: Content is protected !!