Cuddalore

News March 25, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச்24) இரவு 10 மணி முதல் நாளை (மார்25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

கடலூர்: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..

image

கடலூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தபால் வாக்கு செலுத்த விருப்பமுள்ளவர்கள் பேருந்து பயண அட்டை அல்லது DIPR அங்கீகார அட்டையின் நகலுடன் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் 12D அசல் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 24, 2026

கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 24, 2026

கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 24, 2026

கடலூர் மாவட்டத்திற்கு இத்தனை எல்லைகளா ?

image

கடலூர் மாவட்டத்தின் எல்லைகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள். மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 24, 2026

கடலூர்: நேர்காணலில் பங்கேற்ற அமைச்சர்

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று சட்டமன்றத் தேர்தலுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக கட்சி தலைமையிடம், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வெ. கணேசன் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்றார்.

News March 24, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கடலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 24, 2026

9 தொகுதிகளுக்கு 3,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

image

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றிற்கு 20 % கூடுதலாக 3,108 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3,367வாக்குப்பதிவு உறுதி செய்யும் கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!