India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இதற்கு துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும் என பொருள். துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லும் என்று பொருள். துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க 7 எண் கூண்டு ஏற்றப்படுகிறது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, காரைக்கால் – சென்னை அல்லது புதுவை – சென்னை இடையே கரையை கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும் நாளையும் “ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை யொட்டி, கடலூர் மாவட்டத்தில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சிபி ஆதித்யா தெரிவித்துள்ளார். தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( நவ.29) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆதித்யா செந்தில் உத்தரவிட்டார். புயல் எச்சரிக்கை காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் அருகே தைக்கால் தோணித்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் 2 படகுகளில் நேற்று கடலுக்கு சென்றனர். கடல் சீற்றம், காற்றின் வேகத்தில் மீனவர்கள் சென்ற இரண்டு படகுகளும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிய 6 மீனவர்கள் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
வங்ககடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை (நவ.,29) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை மையம் அறிவித்த நிலையில் மீண்டும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை முதலே கடலூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான காற்றும் வீசி வருகிறது.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) காலை 8.30 மணி வரை கடலூர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஃபெங்கால் புயல் இன்று மாலை புயலாக உருவாக உள்ள நிலை கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றோடு பெய்யும் மழையால் துறைமுகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் என்பதை எச்சரிக்க 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.