India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்க முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். இதில் திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,08,964 பெண் வாக்காளர்கள் 1,13,420 இதரர் 2 என மொத்தம் 2,22,386 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்திருப்பவர்கள் தங்களது கரும்புகளை விற்பனை செய்ய வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி செல் 7904946740 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆதித்ய செந்தில்குமார் நேற்று அறிவித்துள்ளார்.
சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பலியான சப் இன்ஸ்பெக்டர், உடலுக்கு, இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. எஸ். பி., ஜெயக்குமார், டி.எஸ். பி.,க்கள் லாமேக், விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண் சப் இன்ஸ்பெக்டர் உடலுக்கு, காவல்துறை சார் பில், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, உடல் தகனம் செய்யப்பட்டது
கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு பணிகளுக்கான மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் நெல்லிக்குப்பம் சிதம்பரம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
காட்டுமன்னார்கோவில் வில்வகுளம் செட்டி தெரு வழியாக அரசு பேருந்து வந்தது. பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் புறப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரக்கண்ணன் என்பவர் குடிபோதையில் கல் வீசி பேருந்தில் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வமிகுதியால் நீர்நிலைகளில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகின்றன. மேலும் தற்போது தொடர் விடுமுறை காலம் வருவதால் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்றைய (06/01/2025) தேதி வரை மொத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 1,069,935 ஆண் வாக்காளர்கள், 1,109,744 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் நாளை (7ஆம் தேதி) மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்துமின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மின்வாரிய செய்திக்குறிப்பில், குறை தீர்க்கும் கூட்டம் நாளை (7 ஆம் தேதி) கடலுார் கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. பொதுமக்கள் மின் வாரியம் மின்வாரியம் குறையிருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 10 மணியளவில் வெளியிட்டார். அப்போது வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் பலராமன் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் தனி தாசில்தார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.