Cuddalore

News January 16, 2025

கடலூர்: மது கடத்தலில் ஈடுபட்ட 17 பேர் கைது

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் மாவட்டத்தில் 15 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 226 மது பாட்டில்கள், 40.68 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டும், மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 16, 2025

கடலூரில் ஆற்று திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள்

image

பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதில் இருந்து 5-ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆற்றுத் திருவிழா வருகிற 19ம் தேதி கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

News January 16, 2025

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

image

மருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை வத்தராயன்தெத்து பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கொட்டகையில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (35), நீலமேகம் (43), ராஜசேகர் (35), செல்வழகன் (35), முத்துக்குமரன் (38), ராஜவேல் (43), முத்துவேல் ராஜா (41) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

News January 15, 2025

செய்தியாளர்களுக்கு வாழ்த்து கலெக்டர் (ம) மாவட்ட எஸ்.பி

image

கடலூரில் செய்தியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இன்று கடலூரில் உள்ள பிரஸ் கிளப் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக செய்தியாளர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 15, 2025

கடலூர் எஸ்பி அதிரடி உத்தரவு 

image

கடலூர் அரசு மருத்துவமனை எதிர்நோக்கினர் பகுதியை சேர்ந்த விஜயபாரதி என்பவரை அடையாளம் தெரியாத 4 நபர்கள் தாக்கியதாக கடலூர் புதுநகர்காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடிவந்த நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார்.  புதுநகர் எஸ்.ஐ.பிரசன்னா இவ்வழக்கில் சம்பந்தப்பட்டஆகாஷ், ஹரிஷ்குமார், விஜய கணேஷ் கைது செய்தும்16 வயது சிறுவர் ஒருவரை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

News January 14, 2025

கடலூர் எஸ்.பி பொங்கல் வாழ்த்து தெரிவிப்பு

image

போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ” அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

கடலூர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 21, 22-ஆம் தேதிகளில் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் பள்ளியில் போட்டிகள் நடைபெறுகிறது. 3 பிரிவுகளில் தனித்தனியே முதல்பரிசு ரூ.10,000, 2வது பரிசு ரூ.7,000, 3வது பரிசு ரூ.5,000 என வழங்கப்பட உள்ளது.

News January 13, 2025

கடலூர் மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஏற்கனவே உள்ள 8 சோதனை சாவடிகளுடன்,கூடுதலாக 84 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்துபணி மேற்கொள்ள உள்ளனர் என எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

News January 13, 2025

கடலூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

கடலூர்: பொங்கல் பண்டிகையின் போது பொது இடங்களில் கூடும் இளைஞர்கள் முன்பகையை காரணமாக தகராறு செய்யும் நபர்கள் மீதும், மதுபோதையில் தகராறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையில்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!