India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெய்வேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று நெய்வேலி அடுத்துள்ள தமிழ்நாடு அரசு வனத்தோட்டம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நெய்வேலி வட்டம் 1-ஐ சேர்ந்த ராஜ் மகன் சதீஷ்குமார் (26), செல்லதுரை மகன் கட்டையன் (எ) தர்மசீலன் (28), குப்புசாமி மகன் அன்பரசன் (28), சேகர் மகன் கருணாமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து வழங்கிடும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) கடலூர் மாநகராட்சி வண்டிப்பாளையம் ரோடு செங்குந்தர் மண்டபம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், மேல்பட்டாம்பாக்கம் வசந்தம் மஹால், வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற கட்டிடம், பூதங்கேணி ஜே.ஏ மஹால் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

சிதம்பரம் அடுத்த பழையநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (17). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஸ்ரீதேவி, கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை என்றும், வேறு கல்லூரியில் சேர்க்கும்படி பெற்றோரிடம் கூறினார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஸ்ரீதேவி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி கவிதா (39). ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கவிதா நேற்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (36) என்பவர் முன்விரோதம் காரணமாக கவிதாவை அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜகோபாலை கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.15) இரவு 10 மணி முதல் இன்று (செப்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. காளிதேவி சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. இக்கோயிலில் அம்மன் 4 முகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். இக்கோயிலில் வழிபட்டால் சகல சௌபாக்கியம் கிடைக்கும், எதிரிகள் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.

கடலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து<
Sorry, no posts matched your criteria.