Cuddalore

News January 23, 2025

கடலூர் மாவட்ட ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினம் தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (23/01/2025) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு, பண்ருட்டி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

பொதுமக்களுக்கு கடலூர் எஸ்.பி. அறிவுரை

image

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடும். அதனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு பழகும் நபர்களிடம், அவர்களது உண்மை தன்மை தெரியாமல் குடும்ப விஷயங்களையோ?, தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News January 23, 2025

சிறுமியிடம் பழகி அத்துமீறிய இளைஞர் கைது

image

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் வேலூரைச் சேர்ந்த அன்புகுமார் (30) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வேலூர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் போக்ஸோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அன்புவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அன்பு (எ) அன்புகுமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.

News January 23, 2025

கடலூரில் ஹோட்டல் முன்பு இறந்து கிடந்த இளைஞர்

image

கடலூர் பாரதி சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் வாசலில் இன்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த வாலிபரின் உடலை கடலூர் புதுநகர் போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

கடலூரில் விரைவில் புத்தகத் திருவிழா- ஆட்சியர்

image

கடலூரில் விரைவில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறும். இந்த புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 22, 2025

கடந்த ஓராண்டில் 3,149 சைபர் க்ரைம் புகார்கள் பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 3,149 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் 2,583 பண மோசடி புகார்கள் மற்றும் 569 பணமில்லாத மெயில் ஐடி திருட்டு, மொபைல் போன் ஹேக் செய்வது உள்ளிட்ட புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News January 22, 2025

கடலூர் ஆட்சியர் இன்றைய சுற்றுப்பயண விவரம்

image

கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று (22.01.2025) கடலூர் அண்ணா சந்தை, கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் செம்மண்டலம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு கட்டப்பட்டு வரும் விடுதி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

News January 22, 2025

கடலூரில் மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.23) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News January 22, 2025

கூடுதல் வாடகை: புகார் தெரிவிக்கலாம்

image

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 எனவும், டயர் வகை எந்திரங்களுக்கு ரூ.1,800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது அப்பகுதி வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

error: Content is protected !!