Cuddalore

News April 3, 2026

கடலூர்: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE.<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

கடலூர்: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE.<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

கடலூர்: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE.<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் மீது வழக்கு

image

பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (23). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை கடந்த 3 மாதமாக பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் மாணவி அணிந்திருந்த ஆடையை பிடித்து இழுத்தும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்து மிரட்டி உள்ளார். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீசார், மகேஷ்குமார் மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News April 3, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூரில் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News April 3, 2026

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளிட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்.7ம் தேதி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

பொது பார்வையாளர் மாற்றம் – ஆட்சியர் தகவல்

image

புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த கார்த்திகே தான்ஜீ இந்திய தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப்பட்டு, தற்போது அசிதா மிஸ்ரா பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆயத்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

கடலூர்: வீடு வீடாக தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல்

image

மகளிர் திட்டம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடந்த தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவு பதிவான 79 மற்றும் 82-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நேற்று நூதன விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தேர்தல் திருவிழா அழைப்பிதழை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 3, 2026

நேருக்கு நேர் மோதிய பைக்குகள் – ஒருவர் உயிரிழப்பு

image

கடலூர் மாவட்டம் மங்களூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(48). இவர் பைக்கில்
ஆவட்டியிலிருந்து மங்களூர் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவா என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக்குடன் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து ஏற்பட்டது. இதில், வேல்முருகன் பலத்த காயம் அடைந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 3, 2026

கடலூர்: பேருந்தில் பயணம் செய்த இளைஞர் திடீர் சாவு

image

சென்னை சூளைமேட்டை சேர்ந்த அருண்குமார்(35), அவரது மனைவி திவ்யா இருவரும் திருச்சியிலிருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எழுத்தூர் அருகே அருண்குமார் திடீரென மயங்கி விழுந்தார். பேருந்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!