Cuddalore

News January 30, 2025

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான கூட்டம் நாளை (31.1.2025) புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News January 30, 2025

கடலூர் பெயர் கரணம் உங்களுக்கு தெரியுமா?

image

கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து 1993 செப்டம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டது. முற்காலத்தில் கடலூரை கூடலூர் என்றே அழைத்துள்ளனர். பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலப்பதால் காலப்போக்கில் இப்பெயர் மருகி கடலூர் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்திலும் இது கடலூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News January 30, 2025

விருத்தாசலம்: ரயிலில் 1,462 டன் யூரியா வருகை

image

விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,462 டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கின. சென்னை மணலியில் உள்ள விஜய் யூரியா நிறுவனத்தில் இருந்து 1,462 டன் உர மூட்டைகள், 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று காலை வந்தன. இவற்றை கடலுார், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

News January 29, 2025

கடலூர்: தேவையான இடங்களில் கேமரா அமைக்க எஸ்.பி அதிரடி உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் தேவையான இடங்களில் குற்றங்களை கண்டறிய மிகவும் உறுதுணையாக இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது மாவட்டத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எத்தனை செயல்பாட்டில் உள்ளன, பழுதடைந்த கேமராக்களை உடனடியாக பழுது நீக்கம் செய்யவும் தேவையான இடங்களில் புதிதாக கேமராக்களை பொருத்தவும் முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

News January 29, 2025

கடலூர்: அங்கன்வாடி மையங்கள் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்

image

கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு இணையுனவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 10,223 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 9,405 பாலூட்டும் தாய்மார்களுக்கு இணையுனவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு வண்ண சீருடைகளும் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 29, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவ பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திட“முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புபவர்கள் htps://ex-servicemen-welfare.pixous.info என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News January 29, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

image

பண்ருட்டி, கோ.பூவனூர், விருதை, விஜயமாநகரம், வேப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, வேப்பூர், அடரி, கீழூர், மங்களூர், சேப்பாக்கம், கீழக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 28, 2025

கடலூர் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு

image

கடலூர் அடுத்த கலையூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகள் பிரதிக்ஷா (5). இன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் பிரதிக்ஷா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவளை பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாள். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 28, 2025

கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

2025ஆம் ஆண்டு ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 31.01.2025 நாளன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News January 28, 2025

கடலூர் அரசு மருத்துவமனையில் 7,89,509 பேருக்கு சிகிச்சை

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 994 பேர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர். இதன் மூலம் கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,632 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!