India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் காவல்துறை அணிகள் கபடி போட்டியில் சிறப்பான சாதனை புரிந்துள்ளன. தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான அரசு ஊழியர்கள் பிரிவு கபடி விளையாட்டுப் போட்டியில், கடலூர் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் அணி இரண்டாம் இடமும், பெண்கள் அணி முதலிடமும் பெற்று முதலமைச்சர் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மக்களே..! மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: உளவுத்துறை
2.பணி: Security Assistant (Motor Transport)
3.கல்வி தகுதி: 10-ம் வகுப்பு & LMV ஓட்டுநர் உரிமம்
4.சம்பளம்: ரூ.21,700 –ரூ.69,100
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.கடைசி தேதி: 28.09.2025
7. இதற்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது.
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

சிதம்பரம் அண்ணாமலைநகரை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ் (29). செல்வராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், அதனை அவரது மனைவி மகாலட்சுமி (22) கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த செல்வராஜ் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW !

ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் தொழிலாளி குருசாமி (65). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள காட்டாற்றில் தூண்டில் மூலம் மீன்பிடித்த போது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABFINS, திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer CSO) பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த <

பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (50). கடலூர் போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக் ஆக பணிபுரியும் மணிகண்டன் நேற்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலம், பாகூரை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ்(55). இவருக்கும், இவரது மனைவி அல்லியம்மாளுக்கும்(46) இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை நிலவி வந்ததுள்ளது. இதனால் மனமுடைந்த நாகராஜ், நேற்று இரவு தூக்கணாம்பாக்கம் அடுத்த திருப்பனாம்பாக்கத்தில் உள்ள இ-சேவை மையம் அருகில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.26) இரவு 10 மணி முதல் இன்று (செப்.27) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.