India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் அடுத்த பழையவண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் (55). பழைய பொருட்களை வாங்கி சரி செய்து விற்கும் வேலை செய்து வரும் இவரது வீட்டின் பின்புறம் வைத்திருந்த பழைய மோட்டார், போர்வெல் குழாய், கார் பேட்டரிகள் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மக்களே..! RTO அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த https://parivahansewas.com/ இணையத்தில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இதில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

விருத்தாசலம் அடுத்த டி.கோபுராபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்பவரது மனைவி லாவண்யா (24). கடந்த ஜூன் 27-ம் தேதி குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்து சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால், ஆலடியில் உள்ள தாய் வீட்டில் வசித்த லாவண்யா மண்ணெண்ணெய் குடித்துவிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 3073
3. கல்வித் தகுதி: டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5. வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6. கடைசி நாள் :16.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

கடலூர் மாவட்டத்தில் நேற்று (செப்.28) டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய தாலுகாவை சேர்ந்த 49 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுத 22,174 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17,025 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், மீதம் 5,139 பேர் தேர்வில் எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் வடுகப்பாளையம் வழியாக சென்ற அரசு பேருந்து பைக்கிற்கு வழிவிடும் போது சாலையோர நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மணிகண்டன் (45) மற்றும் பயணி பூங்காவனம் (65) லேசான காயமடைந்தனர். இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலக கட்டடம் சேதமடைந்ததால் 6/10/2025 முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு கடலூர் நியூ சினிமா தியேட்டர் எதிர்புறம் எண் 8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் செயல்பட உள்ளது. மேலும் விவரங்களை 04142-290039, 9499055908 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அதிவிரைவு படை வீரர்கள் மூலம் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு கடலூர் அடுத்த சாவடி சோதனை சாவடியில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். உடன் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் காவல்துறையினர் உள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்றைய (செப்.,28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும்<
Sorry, no posts matched your criteria.