India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
கடலூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (மார்ச்.10) மாசி மாத ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். SHARE NOW.
உலக மகளிர் நாளையொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமத்தில் வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் குழந்தை சடலமாக மிதப்பதை பார்த்த அப்பகுதிவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் மற்றும் புத்தூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி அருகே கழி, கட்டை கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய மூவர் கைது புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி உதவி காவல் ஆய்வாளர் லெனின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கீரப்பாளையம் பகுதியில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பிரகாஷ் ராஜ் விக்ரம் செல்வம் ஆகிய மூவர் கையில் கட்டை கழி கத்தியுடன் பொதுமக்களை ஆபாசமாக திட்டி அச்சுறுத்தல் செய்ததால் போலிசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026-ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை அன்று பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் ஊராட்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று (05.03.2025) திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.