India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே 35 வயதிற்குட்பட்டவர்கள் 30.8.2024-க்குள், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (23/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட, மண்டல, நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் கூட்டம், கடலூர் சுபா கிராண்ட் ஹோட்டலில் நாளை (24/08/2024) நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தலைமை தாங்க உள்ளதாக கடலூர் மாநகர வி.சிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் பொருளாதார குற்றப்பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த கே. அண்ணாதுரை நாகை மாவட்டத்தின் தடை அமலாக்க பிரிவின் டி.எஸ்.பி-யாக நியமனம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டார். இதேபோன்று தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 8,426 மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து, அவர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. ராஜாராம் 4 தனிப்படைகளை நியமித்துள்ளார். மேலும், இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகத்தில் லாரி திருடிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். மேலும், மகாலிங்கத்தை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படையினர் நேற்று வரை கைது செய்தது.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (22.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் விருத்தாசலம் நகராட்சி பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (22/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் பாக்யராஜ், நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்” என இன்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.