Cuddalore

News March 11, 2025

கடலூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 11, 2025

கடலூர் பொது சுகாதார ஆய்வகங்கத்தில் வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ‘<>லிங்க்<<>>’ இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை 11.03.2025 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

News March 10, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுப்பு

image

கடலூரில் 3வது புத்தகத் திருவிழா, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற மார்ச் 22-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நடைபெறும். விழாவில் எழுதி முடிக்கப்பட்ட உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 10, 2025

கடலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். இப்போதே SHARE பண்ணுங்க…

News March 10, 2025

கடலூர் சன்மார்க்க சங்கத்தில் இன்று ஜோதி தரிசனம்

image

கடலூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (மார்ச்.10) மாசி மாத ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். SHARE NOW. 

News March 9, 2025

கடலூரில் ‘புதிய தோழி விடுதி’ – முதல்வர் அறிவிப்பு

image

உலக மகளிர் நாளையொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

News March 9, 2025

வீராணம் ஏரிக்கரையில் ஆண் குழந்தை சடலம் 

image

காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமத்தில் வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் குழந்தை சடலமாக மிதப்பதை பார்த்த அப்பகுதிவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் மற்றும் புத்தூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2025

புவனகிரி அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மூவர் கைது

image

புவனகிரி அருகே கழி, கட்டை கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய மூவர் கைது புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி உதவி காவல் ஆய்வாளர் லெனின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கீரப்பாளையம் பகுதியில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பிரகாஷ் ராஜ் விக்ரம் செல்வம் ஆகிய மூவர் கையில் கட்டை கழி கத்தியுடன் பொதுமக்களை ஆபாசமாக திட்டி அச்சுறுத்தல் செய்ததால் போலிசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 8, 2025

கடலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 8, 2025

இலவச பஸ் பயண அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026-ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.

error: Content is protected !!