India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஜி.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.பிரணவி 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த பி. ஸ்ரீ கோதைநாயகி, அபினவ் தென்றல் மற்றும் வினோதினி ஆகியோர் 591 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தனர்.அவர்களுக்கு பள்ளி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 246 பள்ளிகளில் 26 ஆயிரத்து 911 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டத்தில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இதில் அரசு பள்ளிகள் 12, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, மற்றும் தனியார் பள்ளிகள் 57 என மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால 3ஆம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 30ம் தேதி துவங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 4ஆம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் 14ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கடலூரில் நேற்று நடந்தது. இதில் மாணவ- மாணவிகள் மொத்தம் 230 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்களை 7, 10, 13, 17 ஆகிய வயதுக்குட்பட்டோர் மற்றும் பெரியவர்கள் ஆகிய பிரிவுகளில் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமை நடுவர் அரவிந்தசாமி தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 28,518 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26911 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் 94.36 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 22-வது இடத்தை பிடித்தது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 92.04 சதவீத தேர்ச்சி பெற்று 27-வது இடத்தை பிடித்தது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கடலூர் மாவட்டத்தில் 94.36 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.32 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 96.29 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் 14வது வார்டில் அமைந்துள்ள அனதீஸ்வரன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை 6 மணி அளவில் திருக்கோவிலில் நடைபெற்றது முன்பாக நந்தி பகவானுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளில் அபிஷேகம் செய்தனர். பின்பு அனதீஸ்வர்க்கு பெருமான் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு தீபாரணை காண்பித்து திருக்கோவிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் நேற்று அதே பகுதியை சேர்ந்த 15 வயது உடைய மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளாள். இது குறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று பிற்பகல் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் கடலூர் கம்மியம் பேட்டை பள்ளி மற்றும் மஞ்சகுப்பம் சி கே பள்ளி முதுநகர் சரஸ்வதி பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று நடைபெற்றது இதற்காக மாணவர்கள் 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர் இந்த தேர்வானது பிற்பகல் 2 மணி முதல் 5.20 வரை நடைபெறுகிறது.இந்த தேர்விற்கு மாணவர்கள் முழுமையான பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.