Cuddalore

News January 12, 2026

கடலூர்: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

image

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

கடலூர்: புகையில்லா பொங்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

முன்னோர்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் இருந்துள்ளது. தற்பொழுது போகிப்பண்டிகையில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் கொளுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. புகையில்லா பொங்கல் கொண்டாட கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்: 900 மாணவர்கள் நடன அர்ப்பணம்

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற நாதாஞ்சலி நிகழ்ச்சியில், 900க்கும் மேற்பட்ட நடன மாணவ, மாணவிகள் பங்கேற்று ஒரே நேரத்தில் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றினர். இறைவன் நடராஜருக்கு நடனத்தை அர்ப்பணிக்கும் வகையில், நடந்த இந்நிகழ்ச்சி உலக சாதனை முயற்சியாகவும் அமைந்தது. பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News January 12, 2026

பெண்ணாடம்: கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த சின்னதுரை மகன் சந்தோஷ் (36). லாரியில் (ஜன.11) அனுமதியின்றி கூழாங்கல் கடத்தி வந்ததை பெண்ணாடம் உதவி ஆய்வாளர் பாக்யராஜ், தடுத்து நிறுத்தி லாரியை பறிமுதல் செய்தார். இது குறித்து பெண்ணாடம் காவல்துறையினர் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்: மனித கறி கேட்டு ஓட்டலில் ரகளை

image

கடலூர், பொன்னேரியில் தினேஷ் (26) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கு 7 வாலிபர்கள் சாப்பிட வந்தனர். மது போதையில் இருந்த அவர்களிடம் ஓட்டல் ஊழியர், சாப்பிட என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு அவர்கள் மனித கறி வேண்டும் என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கவியரசன் (24), பிரசாந்த் (19), ஸ்ரீகாந்த் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

News January 12, 2026

கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில், ஏரிகளின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்கு விட ஏதுவாக, மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள 30 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக 21.1.2026 முதல் https://www.tntenders.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.12) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!