India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வருகிற 17.4.2025 அன்று கடலூாில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற உள்ளது. எனவே இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 390 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில் 390 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பலவித இடர்பாடுகள் நேரிடுகிறது. இதை தடுக்க கடந்த டிசம்பர் 2024இல் 194 நாய்களுக்கும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 511 பெண் நாய்களும், 467 ஆண் நாய்களும் என மொத்தம் 978 நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ‘ஸ்டீல் பிளான்ட்’ என்றாலே சேலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் பரங்கிப்பேட்டையில் தான் முதல் இரும்பு உருக்காலை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 1818இல் கிழக்கிந்திய கம்பெனியில் சிவில் ஊழியராக பணியாற்றிய ஜே.எம்.ஹீத் என்பவர், நான் அந்த உருக்காலையை தொடங்கினார். சிறப்பாக இயங்கி வந்த பரங்கிப்பேட்டை உருக்காலை 1867இல் மூடப்பட்டது. SHARE NOW!
சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.nic.in/ என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், புவனகிரி ஆகிய 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (12/4/2025) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் 9 நாட்களும் தினமும் மகா அபிஷேகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.