India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
கடலூர் மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள், இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். 2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மே.03 ஆம் தேதி கடைசி நாள் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விருதாச்சலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அப்பு சட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் விஜயசாந்தி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தந்தை செல்வராஜ் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் தந்தையின் கைகளால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, அப்பு காதலியை திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்நாளில் ஸ்ரீ முஷ்ணம் பூவராகவரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..
TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய tnpsc.gov.in என்ற இணையத்தில் பார்க்கவும். இதை ஷேர் செய்யவும்
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள (Marketing Executive) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <
மங்கலம்பேட்டையில் டியூஷன் சென்டர் நடத்தி வருபவர் வெங்கடேசன் (42). இவர் தனது டியூஷனில் படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து விருத்தாச்சலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைப்படி ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி நேற்று வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி திருவதிகையில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயில் ஒன்று அந்த முதியவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார், இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய இங்கு <
Sorry, no posts matched your criteria.