India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் நேற்று காலை விருதாச்சலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் பின்னால் வந்த மகேந்திரா டிரக் பைக் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் குருவையர் தெருவில் உள்ள ஶ்ரீலஶ்ரீ அவதூத சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று முன்தினம் நடைபெற்றது கோயில் விமான கலசத்திற்கு கும்பநீரை தீட்சிதர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீலஶ்ரீஅவதூத சுவாமிகள் ஆலய நிர்வாகிகள் செய்தனர்
கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே விற்கப்பட்ட பதநீரை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பருகின்றனர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோதண்டராம கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை என 11 நாட்கள் ராமநவமி மகோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை விசேஷ திருமஞ்சனமும் மாலை வீதி உற்சவமும் நடைபெற்றது. இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான ராமர் பட்டாபிஷேக வைபவம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா , சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடலூர், அரசு பெரியார் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர், மஞ்சக்குப்பம் சபாபதி செட்டி சாலையில் அமைந்துள்ள யூ.எம்.ஏ குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சென்டரில் இலவச ரத்த பரிசோதனை முகாம் நாளை (23-ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரை உள்ளிட்ட முழு இரத்த பரிசோதனைகள் பொதுமக்களுக்கு செய்யப்பட உள்ளது. முன்பதிவிற்கு 9003765409 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கடலூரில் கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் சிக்னல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் 79-வது ஆண்டு விழா, கடலுார் சங்க அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு, தாலுகா வங்கி ஊழியர் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி கடலுார் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் வினோத், சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் மீரா பேசினார். வங்கி ஓய்வூதியர் சங்க மூத்த தலைவர் வாழ்த்தி பேசினார்.
Sorry, no posts matched your criteria.