India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகர் மாவட்டம் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கடலூரில் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணி தொடர்பான துண்டறிக்கையை, வி.சி.க மாநகர செயலாளர் செந்தில், வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் இன்று வழங்கினார்.
கடலூர் டவுன்ஹால் அருகே சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று தடுப்பு குறித்து ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம், செம்மண்டலம் தனியார் மகளிர் கல்லூரியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் எஸ்எல் லூமேக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளதாக கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார்களையும் அன்று ஒரு நாள் மூட வேண்டும். இதை மீறி கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், நாளை நெய்வேலி தொ.மு.ச. அலுவலகத்தில், திமுக மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி வாகனத்தை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் குடிநீர் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்துக்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுனர் பணியிடத்திற்கு தகுதி உள்ள நபர்கள் ஆக.16 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 வயது முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என கலெக்டர் இன்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஆக.15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மைதானத்தில் போலீசார், என்.சி.சி., ஜே.ஆர்.சி. மாணவர்கள், ஊர்க்காவல் படை, தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினர்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 24 போடி செட்டி தெரு மற்றும் வார்டு 25-ல் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல இடங்களில் கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐ.ஏ.எஸ், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.