Cuddalore

News October 21, 2024

அண்ணாமலைப் பல்கலை., ஊழியர்களுக்கு சிக்கல்

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணி அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது என அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன், பொதுச் செயலர் .சுரேஷ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 21, 2024

அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் விநாயகம் மகள் வைஷ்ணவி (26). முதுநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கும் வைஷ்ணவி நேற்று பணி முடிந்தபின் அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2024

கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அக்டோபர்-21 (நாளை) மற்றும் அக்டோபர்-23 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ் 

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குகுறைந்த வாடகையில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் இ-வாடகை செயலியான ‘உழவன் செயலி’ மூலம் குறைவான வாடகையில் இயந்திரங்கள், மற்றும் கருவிகளை வீட்டிலிருந்தே பதிவு செய்து பயன் பெறலாம். பதிவு செய்ய, செயலில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 20, 2024

பெண்ணாடம் பள்ளிக்கு விருது வழங்கிய நடிகை

image

சென்னையில் தேசிய கல்வி நிறுவனம் நடத்திய விழாவில் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடம் சிறந்த புதுமை மிக்க பள்ளி மற்றும் சிறந்த தரமான கல்வியை வழங்கும் பள்ளி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் வழங்க, பள்ளியின் சார்பில் பள்ளியின் துணை இயக்குனர் பார்வதி ஹரி கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

News October 19, 2024

கடலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

image

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்னிக்கு சென்று கொண்டுருந்த கார் சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெங்களூரை சேர்ந்த கங்காலட்சுமி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 19, 2024

கடலூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 19, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளைப் பெற்றவர்கள் நவம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். ஷேர் செய்யவும்

News October 19, 2024

உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தாட்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 19, 2024

உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7%) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.