India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மஞ்சக்குப்பம், வில்வநகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, குண்டுசாலை ரோடு, போலீஸ் கோர்டர்ஸ், புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், பாரதி ரோடு, பீச்ரோடு, புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் , கூடுதல் ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் அருகே பில்லாலி பகுதியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள துறைகளை கூறினர். இதில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கடலூர் சரக ஆய்வர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்லாலி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் 13-ம் தேதி நடிகர் சேரன் காரில் வந்தபோது தனியார் பேருந்து அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்ததாக கூறி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள், சேரன் போலீசில் புகார் அளிக்காமல் தானாக சட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (14/08/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 34 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்ததும், நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.