Cuddalore

News August 17, 2024

கடலூரில் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வையாபுரிப்பட்டினம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 17, 2024

திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் துணை மேயர் பங்கேற்பு

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பியின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, காமராஜர் அரங்கில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், வி.சி.க கடலூர் மாநகர செயலாளர் செந்தில், கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 16, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

கடலூர் ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து அதிகரிப்பு

image

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு தினம் தோறும் மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நெல் (ஏடிடி – 37) வரத்து 149.74 மூட்டை, நெல் (ஏ.எஸ்.டி – 16) வரத்து 154.64 மூட்டை என மொத்தம் 304.63 மூட்டைகள் வரத்து வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த விளை பொருட்களும் இன்று விற்பனைக்கு வரவில்லை.

News August 16, 2024

வள்ளலார் சத்திய ஞான சபை வழக்கில் தமிழக அரசு பதில்

image

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தமிழக அரசு மேற்கொண்ட மேம்பாட்டு பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இன்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, வள்ளலார் மையத்தில் மேம்பாட்டு மேற்கொள்ள தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள நிலம் தொல்லியம் முக்கியம் வாய்ந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

News August 16, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி கொத்தவாச்சேரியில் 34 மிமீ மழையும், புவனகிரியில் 28 மி.மீ, பண்ருட்டியில் 24.6 மிமீ, அண்ணாமலை நகர் 22 மி.மீ, குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலத்தில் 15 மிமீ, சிதம்பரத்தில் 14.3 மிமீ, கடலூரில் 4.1 மிமீ மழை பதிவாகி உள்ளது.

News August 16, 2024

கடலூரில் புதிய போக்குவரத்து சேவை

image

கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 16, 2024

பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

பண்ருட்டியில் இருந்து இன்று காலை அரசு பேருந்து ஒன்று கடலூர் நோக்கி புறப்பட்டது. பண்ருட்டியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் டிரைவர் மற்றும் 5 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News August 16, 2024

போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

image

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் மகேஷ்குமார் (42), அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 16, 2024

போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

image

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் மகேஷ்குமார் (42), அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!