India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 6.9.2024 அன்று திருச்சியில் நடக்கிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விருதாச்சலம் இருளக்குறிச்சியை சேர்ந்த செந்தில் தனது தாயுடன் மனு அளிக்க வந்தார். இதில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டணர். கூலி தொழிலாளியான அவர் தனது தாயுடன் வசித்து வருவதாகவும் இவரது நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியுள்ளதாக கூறி மனு கொடுத்தார்.
கடலூர் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது. அதாவது 1 கிலோ வஞ்சிரம் 750 ரூபாய், சங்கரா 300 ரூபாய் மற்றும் திருக்கை மீன் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் விலை குறைவாக இருந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சீர்காழி தாலுகா கீழவாடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் விருத்தாசலத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மணவாளநல்லூர் நோக்கி சென்றபோது எதிரே மு.பரூர் பகுதியிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரியை பங்களா அருகில் ஏஎஸ்ஆர் நகரில் அரிசி கடை ஒன்றில் ஆன்லைனில் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் மூர்த்தி என்பவரை சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் இன்று கைது செய்து புவனகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து மூர்த்தி மீது புவனகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள இளனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற விவசாயி தனது வயலுக்கு சென்ற போது அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்த சுந்தரமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விவசாயி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை அருகே கொரத்தி கிராம ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்த நிலையில், அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆயுள் போது வட்டாட்சியர் பள்ளி கல்வித்துறை அதிகாரி, ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (ஆக.31) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு பள்ளிக் கல்வித் துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.