India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, பொள்ளாச்சியில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் கடந்த 12ஆம் தேதி பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் டூவீலரில் சென்றபோது, அவரை தாக்கி டூவீலர் மற்றும் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் வினோத், ஸ்டாலின், யோகேஷ் மற்றும் 21 வயது பெண் உள்ளிட்ட நால்வரை, 24 மணி நேரத்தில் கைது செய்து, டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை புதூரை சேர்ந்தவர் சூர்யா (22). இவரது தொலைபேசி எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், பணம் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி சூர்யா ரூ.8 லட்சத்து 35 ஆயிரத்து 665 அனுப்பி வைத்தார். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேட்டுப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளி தேர்வுகள் முடியும் வரை மின்விநியோகம் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. இதனால் இச்செய்தி வதந்தி என மேட்டுப்பாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் சத்யா தெரிவித்துள்ளார்.
தபால் துறை சார்பில் நடத்தப்படும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் நடைபெற உள்ளது. இதில் கோவை கோட்டத்துக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், கடிதங்களை வரும் 21ம் தேதிக்குள், ‘முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை – 641001’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாணவ, மாணவியர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை ரத்தினபுரி சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் கண்ணப்ப நகரை சேர்ந்த முத்து கருப்பையா மகளை காதலித்து வந்துள்ளார். இதை முத்து கருப்பையா கண்டித்தார். இதனால் நேற்று முந்தினம் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்தமுத்து கருப்பையா, மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மணிகண்டன்காயமடைந்த சிகிச்சை பெற்று வருகிறார். குறித்து காவல்துறையினர் முத்து கருப்பையாவை கைது செய்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் மட்டும் 67 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘பிராப் ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் வீடுகள் விற்பனை 36 சதவீதம் உயர்ந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் 21% சரிந்துள்ளது. புவனேஸ்வரில் 47% அதிகரித்துள்ளது. கட்டுமான மூலப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஊகங்கள். போன்றவற்றால் நகரங்களில் வீடுகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது என்ற செய்தியை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவை மாநகரின் 12 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 56பேர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அல்உம்மா அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இவ்வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்தது.
சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் உள்ள யுடிஐஎஸ் மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளை முதல் நாளை மறுநாள் வரை (பிப்.15,16) நடைபெறும். இதனால் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும் வரிவசூல் பணிகள் மற்றும் வரி செலுத்தும் அனைத்து சேவைகளும் இன்றிரவு 8 மணி முதல் வரும் 16ம் தேதி தற்காலிகமாக இயங்காது என கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு, நிலுவைத் தொகை இல்லாவிட்டாலும், நிலுவைத் தொகை எனக் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தபோது, நிலுவைத் தொகை குறிப்பிட வேண்டிய இடத்தில், தவறுதலாக மொபைல் எண் அச்சாகி இருந்ததும், ஏற்கனவே சொத்து வரி செலுத்தியவர்களுக்கும், எஸ்.எம்.எஸ். சென்றிருப்பதும் தெரிய வந்தது.
Sorry, no posts matched your criteria.