Coimbatore

News February 18, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2025

கோவை எஸ்பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.

News February 18, 2025

கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவாது

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையில் 34 அடி, பில்லூர் அணையில் 77 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. பில்லூர் அணையின் ஆதாரமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை, அவலாஞ்சி, கெத்தை உள்ளிட்ட அணைகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. எனவே கோடை காலத்தில் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

News February 18, 2025

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்!

image

அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அருளும் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.

News February 18, 2025

BREAKING சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது

image

கோவை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்களை கைது செய்தனர். கடந்த ஞாயிறு அன்று சமூக வலைதளம் மூலம் சிறுமியை தொடர்பு கொண்ட இளைஞர்கள், தனி அறைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பாட்டியின் புகார் கொடுத்த நிலையில், 7 மாணவர்களை கைது செய்தனர்.

News February 18, 2025

பழிவாங்கும் நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்

image

கோவை ஆர்எஸ்புரத்தில் பாஜக சார்பில் நடந்த புஷ்பாஞ்சலி கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தொடர்ந்து இன்று அவர் ஆஜரான நிலையில் 1 மணி நேர விசாரணைக்கு பின் அனுப்பப்பட்டார். பின், பேசிய அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றார்.

News February 18, 2025

ஆத்மா சாந்தியடையவில்லை: போஸ்டரால் பரபரப்பு

image

கோவையில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை என எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அதில் பகலும், இரவு எம்ஜிஆர் கட்சியை வளர்த்து முதலமைச்சார் ஆனார். ஆனால், தற்போது கட்சியில் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இணைந்தால் தான் அவர் ஆத்மா சாந்தி அடையும் என குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

News February 18, 2025

மண் சரிந்து விழுந்து இளைஞர் பலி

image

கோவை மருதமலை ஐஓபி காலனியில் மாநகராட்சி சார்பில் புதை சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களில், கௌதம் (29) என்ற இளைஞரும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்ததில் கெளதம் மண்ணில் புதைந்து பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 17, 2025

கோவை: குறைதீர்க்கும் ஈச்சனாரி விநாயகர்!

image

கோவை மாவட்டத்தில் ஈச்சனாரியில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற விநாயகர் கோயில். 16ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும், இந்த ஆலயத்தில் உள்ள 6 அடி உயர விநாயகர் சிலை, மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. கடன், நோய் தீர, பக்தர்கள் இங்கு சென்று, விநாகருக்கு சிறப்பு வழிபாடு செய்தால், நலம் பெறலாம் என்பது நம்பிக்கை. Share It

News February 17, 2025

கோவை மாவட்டத்திற்கான வானிலை அறிக்கை

image

கோவை வானிலை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி வெப்பநிலை: 21°C (70°F), அதிகபட்ச வெப்பநிலை: 36°C (96°F) பதிவாகலாம்; வெப்பம் அதிகரித்து காணப்படும். மேலும் 23ஆம் தேதி குறைந்த வெப்பநிலை: 19°C (65°F), அதிகபட்ச வெப்பநிலை: 38°C (100°F) பதிவாகலாம். ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!