Coimbatore

News January 13, 2026

பொங்கல் பரிசு: கோவை மக்களே உஷார்

image

கோவை மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News January 13, 2026

மருதமலைக்கு காரில் செல்ல தடை

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு காரில் மலை மேல் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் மலைப்படிகள் மற்றும் கோயில் பேருந்து வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். (இத்தகவலை SHARE பண்ணுங்க)

News January 12, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News January 12, 2026

கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் 1).கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009. 2). தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441. 3). Toll Free 1800 4252 441. 4).சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126. 5).உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 12, 2026

கோவை: செல்போனில் லிங்க் அனுப்பி மோசடி

image

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திரசேகர்(71). இவரது செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த இணைப்பை திறந்து பார்த்த போது, முதியவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பின் ரூ.16 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், குஜராத்தைச் சேர்த்த 10 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

News January 12, 2026

கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 12, 2026

கோவை: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 12, 2026

கோவை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கோவை மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

அன்னூர் அருகே பயங்கர விபத்து: அதிமுக நிர்வாகி பலி

image

அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் அப்பகுதியில் அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று காலை தனது பைக்கில் சோமனூர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!