Coimbatore

News January 14, 2026

கோவை: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

கோவை: ஆதார் வேண்டுமா?.. ஒரு ‘Hi’ சொல்லுங்க

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

கோவையில் போலீசார் குவிப்பு

image

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஜன.14, ஜன.15-ம் தேதிகளில் காலை 8 மணி இரவு 10 மணி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (13.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

கோவை: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

கோவை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 13, 2026

கோவை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

கோவை: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு

image

கோவை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 13, 2026

கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கியமாக பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர குற்ற சம்பவங்கள் மற்றும் போதை பொருட்கள் நடமாடத்தை குறைக்க கூடுதல் போலீசாரும் மப்டியில் உலா வர உள்ளனர்.

News January 13, 2026

கோவை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

News January 13, 2026

உக்கடம் அருகே தந்தை, மகளுக்கு கத்திக்குத்து

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிபானா(24) என்பவர் நேற்று வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ரிபானாவின் தந்தையை கத்தியால் குத்தினர். இதனைத் தடுக்க முயன்ற ரிபானாவையும் கத்தியால் குத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!