Coimbatore

News January 16, 2026

கோவை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0422-2449550) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

கோவை: தோஷங்கள் நீங்க வேண்டுமா? இங்கே போங்க

image

கோவை சோமனூர் அருகே உள்ள புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், தீராத நோய்களையும், தோஷங்களையும் நீக்கும் சக்திவாய்ந்த தலமாகக் கருதப்படுகிறது. இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண் வல்லமை கொண்டதாக கூறப்படுகிறது. அதவாது இந்த மண்ணைச் சிறுது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை மற்ற பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 16, 2026

எச்சரிக்கை..கோவையில் இன்று தடை !

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வரும் இன்று (வெள்ளிக்கிழமை) அன்று ஆடு, மாடு கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் கோவை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 16, 2026

காரமடையில் பயங்கரம்: நண்பன் மனைவியுடன் தொடர்பு!

image

காரமடை கண்டியூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், ரமேஷ்குமாருக்கும் அவரது நண்பர் சுரேஷ்குமாரின் மனைவிக்கும் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனை பலமுறை கண்டித்து கேட்காததால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாரின் உறவினர்கள் சுந்தரமூர்த்தி, குருந்தாசலம், செந்தில்குமார் ஆகிய மூவரும் ரமேஷ்குமாரை கொலை செய்த்தாக கூறப்படுகிறது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்

News January 16, 2026

மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

image

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்புக்கான இரு நாள் பயிற்சி வரும் 19, 20ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. சாம்பார், ரசம், கறிமசாலா, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா, ரெடிமேட் பேஸ்ட் தயாரிப்பும், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பும் கற்பிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

கோவை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News January 15, 2026

கோவை மக்களே: உடனே SAVE பண்ணுங்க!

image

கோவை மக்களே, உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 044-25342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!