India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர் பாரதி வீதியை சேர்ந்தவர் பெயிண்டர் அருண்குமார்(25). இவர் திருவிக வீதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிக்க வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அருண்குமாரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

கோவை: மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன் புதூர் மற்றும் வலையபாளையத்தின் சில பகுதிகள், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது

அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வரும் செல்லமுத்து(30), ஊருக்குச் செல்வது தொடர்பாக மனைவி காயத்ரியுடன்(29) தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த காயத்ரி, கொதிக்கும் எண்ணெயைக் கணவன் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த செல்லமுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் இன்று (16.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

மேற்குதொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணை, வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், வார இறுதி நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலா வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் <

கோவையில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு இயக்கப்பட்டு வந்த தன்பாத்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
Sorry, no posts matched your criteria.