Coimbatore

News October 12, 2024

கோவையில் ரேபிஸ் தாக்கி இளம்பெண் மரணம்

image

சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன், அப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தெரு நாய்களில் ஒன்று கடித்துவிட்டது. அவர், ‘ரேபிஸ்’ நோய்க்கான ஊசி போடாமல் விட்டுவிட்டார். இதனால் அவரை, ‘ரேபிஸ்’ நோய் தாக்கியது. சிகிச்சைக்காக நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News October 11, 2024

ஆயுத பூஜை கொண்டாடிய எஸ்.பி.வேலுமணி

image

முன்னாள் அதிமுக அமைச்சரும் கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திலும் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினார். சாமி படத்தை வைத்து, பழங்கள், பொறி, கடலை ஆகியவை வைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 11, 2024

நம்மை காக்கும் 48 திட்டத்தில் மருத்துவமனைகள் இணைப்பு

image

சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் கோலார்பட்டி அரசு மருத்துவமனை,அருண் மருத்துவமனை, ஏ.ஆர். மருத்துவமனை, ஆராதனா மருத்துவமனை, மற்றும் கே.ஜி.எம்,மருத்துவமனை, பில்ஸ் மருத்துவமனை,ஆகிய மருத்துவமனைகள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News October 11, 2024

கோவை மாணவிகள் மும்பைக்கு கடத்தல்: போலீஸ் அதிரடி

image

சூலூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவிகள் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றனர். வீடு திரும்பாததால் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வட மாநில இளைஞர்கள் மனோஜ்குமார், சாய் கியான் ஆகியோர் மாணவிகளை ஏமாற்றி மும்பைக்கு ரயிலில் கடத்தி சென்றது தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து மாணவிகளை மீட்டனர்.

News October 11, 2024

செந்தில்பாலாஜி குறித்து அவதூறு பரப்பியவர் கைது

image

வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் விஸ்வேஷ்குமார். இவர், அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறாக பதிவை வெளியிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் கேட்டுள்ளார். அப்போது, விஸ்வேஷ்குமார் அவரை மிரட்டி தகாத முறையில் பேசியுள்ளார். இது தொடர்பாக, ராஜமாணிக்கம் அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து விஸ்வேஷ்குமாரை நேற்று கைதுசெய்தனர்.

News October 11, 2024

கோவை மக்களே ரேஷன் கடையில் வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின்கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் 199 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 11, 2024

கோவையில் ஆட்கள் தேர்வு: உடனே கால் பண்ணுங்க!

image

கோவை ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் அக்.14 ஆம் தேதி நடக்கிறது. முகாமில் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். விவரங்களுக்கு 9566531310, 9486447178 என்ற எண்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 11, 2024

தொழில்முனைவோர் ஓராண்டு சான்றிதழ் படிப்பு

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து ”தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. வகுப்புகள் வரும் 14ஆம் தேதி துவங்கும். விவரங்களுக்கு 8668107552, 8668101638, 8072799983 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 10, 2024

கோவை மண்டல தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தல்

image

மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கோவை மண்டல தலைமைப் பொறியாளர் குப்புராணி இன்று அறிவுறுத்தியுள்ளார். அதில் மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்ல வேண்டாம் என்றும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

News October 10, 2024

ஆம்லெட் போட்டு தர மறுத்த காவலாளி கொலை

image

செட்டிபாளையம் அருகே ஆம்லெட் போட்டு தர மறுத்த காவலாளியை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது. தனியார் நிறுவனத்தில் காவலாளிகளாக ஷெரிப், ஜோசப் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷெரிப்பிடம் ஜோசப் ஆம்லெட் போட்டு தருமாறு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜோசப் ஷெரிப்பை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி ஷெரிப் உயிரிழந்தார். ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.