India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு வாலிபர் இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்து அவரது வீட்டுக்குள் நுழைந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து இளம்பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் மார்ச்.18 புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க <
காரமடையை சேர்ந்த 4 பேர் கடந்த 2019-ஆம் தேதி தனியார் பேருந்தில் காரமடைக்கு சென்றனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதற்கான உரிய இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட இணையதள முகவரி http://coimbatore.nic.in என்ற முகவரியில் உள்ளது. தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் . இவர் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என கேட்டு கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று (மார்ச்.18) இந்திய நாட்டின் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்த்து மோடி ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிய இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மிரட்டல் விடுத்த மர்மநபர் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, பள்ளியில் போலீசார் குவிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று மாலை கோவையில் “ரோடு ஷோ” நடத்த உள்ள நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி, கோவை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் சிபிஐஎம் போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுக போட்டியிடுகிறது. பொள்ளாச்சி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கே.ஷாமுகசுந்தரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.