Coimbatore

News March 6, 2025

துப்பாக்கியால் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்

image

கோவையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற விவகாரத்தில், 29 குண்டுகளை பயன்படுத்தியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், ஒரே குண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு குண்டுக்குள் 29 Pellets அதாவது பால்ரஸ் உருண்டைகள் இருக்கும். துப்பாக்கி உரிமம் அவரது தந்தையின் பெயரில் உள்ளது. மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் குண்டுகளில் இது போன்று இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 6, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2025

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்

image

தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் இன்று விடுத்த செய்திக்குறிப்பில், வரும் மார்.28 முதல் ஜூலை.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்.29 முதல் ஜூலை.7 வரை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் சனி, திங்கட்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News March 5, 2025

காவல்துறையினர் மிரட்டுவதாக ஆணையரிடம் மனு

image

கோவை, பேரூரைச் சேர்ந்தவர் சத்யா. இவரது கணவர் விஜயன். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சந்தன மரத்தை வெட்டியதாக வடவள்ளி காவல்துறையினர் விசாரணைக்காக தற்போது அழைத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் தங்களை கட்டாய படுத்தி ஒத்து கொள்ள சொல்லி மிரட்டுவதாக இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

News March 5, 2025

11ம் வகுப்பு தேர்வு 36,000 பேர் எழுதுகின்றனர்

image

தமிழகம் முழுவதும் +1 பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் +1 பொது தேர்வை மொத்தம் 127 மையங்களில் 363 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 36,664 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வின் போது முறைகேடுகளை தடுக்கும் வகையில் 300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு மையங்களில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

News March 5, 2025

பல்கலைக்கழகத்தில் சிறுத்தை: மாணவர்களுக்கு விடுமுறை

image

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை இன்று நடமாடியதைத் தொடர்ந்து உடனடியாக, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது யாரையும் அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழகம் பின்புள்ள புதிய கட்டிடப் பகுதியில் தற்போது வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 5, 2025

வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த மாணவர்கள்

image

கோவை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதனை கல்லூரியின் முதல்வர் எழிலி துவக்கி வைத்தார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையைச் சேர்ந்த அரசு, தனியார் கல்லூரிகள் என 26 கல்லூரிகள் பங்கேற்றன. 4,250 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 2,291 மாணவ, மாணவிகள் முகாமில் பங்கேற்றனர். 43 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் நிறுவனங்களுக்கு மாணவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தன.

News March 5, 2025

கோவையில் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

image

கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச்.5) கோயிலை சுற்றி உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை என கோவை கலெக்டர் பவன்குமார் கிரியப்பானவர் அறிவித்தார். 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு (05.03.2025) காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

கோவை மாவட்டத்தில் இன்று (04.03.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரில் டி.எஸ்.பி. பொன்னுசாமி, மற்றும் பி.என்.பாளையம், பேரூர், ககசாவடி, கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி மேற்கு, ஆழியார், சிறுமுகை, மேட்டுப்பாளையம் போலீசாரின் பெயரும் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது. மேலும் அவசர எண் 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News March 4, 2025

கோணியம்மன் தேரோட்டம்: போக்குவரத்து மாற்றம்

image

கோவையில் கோணியம்மன் தேரோட்டம் காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள், செல்வபுரம், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடையலாம். மருதமலை ரோடு, தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.

error: Content is protected !!