Coimbatore

News May 1, 2024

சிறுவர்களுக்கு இலவச கலை பயிற்சி

image

கோவை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை அரசு இசை கல்லூரியில் செயல்படும் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 10 ஆம் தேதி வரை காலை 10 முதல் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் தொடா்பான பயிற்சிகள் இன்று முதல் அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 97515 – 28188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

பாலத்தில் தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்

image

ஆனைமலை காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவில் பிரிவு வழியாக, வெப்பரை , காக்கா கொத்திபாறை ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர வாகனம், சரக்கு ஆட்டோக்களில் சென்று வருகின்றனர்.
இப்பாதையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, இந்த பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துள்ளனர்

News May 1, 2024

கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

image

காரமடை, சென்னிவீரம் பாளையத்தில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமோனியா கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து வடக்கு ஆர். டி.ஓ.கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் ஆகியோர் அமோனியா காஸ் கசிந்த இடத்தில் ஆய்வு செய்த பின் சுமார் 300 கிலோ, அமோனியா காஸ் வேறு ஒரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது

News May 1, 2024

நீர் மோர் வழங்கிய மாநகராட்சி ஆணையர்

image

கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த வெயில் காலத்தில் பயனடையும் விதமாக மாநகரின் 5 மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் மொத்தம் 100 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். இந்த தொட்டிகள் ஒவ்வொன்றும் மொத்தம் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. இதை தவிர நீர் மோர் பந்தல்களும் துவங்கப்பட்டுள்ளது. இன்று நீர் மோரை ஆணையர் வழங்கினார்.

News April 30, 2024

கோவை: 45 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சி

image

கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த ஆண்டு அரசு பொருட்காட்சியானது கோவை மாநகராட்சி, வ.உசி மைதானத்தில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டு, 45நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

News April 30, 2024

அம்மோனியா வாயு கசிந்த இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு

image

கோவை, காரமடை ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சி சென்னி வீரம்பாளையத்தில் உள்ள சிப்ஸ் கம்பெனியில் அம்மோனியா வாயு கசிவினால் நேற்று விபத்து ஏற்பட்டது. அதனை மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் காரமடை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.சுரேந்திரன் ஆய்வு மேற்கொண்டு மேலும் அவ்வூரில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மதிய உணவு வழங்கினார்.

News April 30, 2024

கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்தது

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவாணி அணையில் தற்போது நீர்மட்டம் சரிந்து வருகிறது. கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வழக்கமான நாட்களில் விநியோகிப்பதை போல் தற்போது குடிநீர் விநியோகிக்க முடியாது. குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.

News April 30, 2024

கோவை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

கோவையில் நேற்று (ஏப்.29) 103.64 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

சென்னை ரயில், காட்பாடி வரை மட்டுமே செல்லும்

image

கோவையிலிருந்து ஏப்.30ம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சென்னை செல்லாமல் காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில், அதே நாளில் சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வந்தடையும் என இன்று (ஏப்ரல்.30) சேலம் கோட்ட ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!