Coimbatore

News March 26, 2024

இவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் – வனத்துறை எச்சரிக்கை

image

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் கடந்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதயக்கோளாறு , ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

வரும் ஏப்.19 ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (மார்ச்.25) கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 25, 2024

வெள்ளியங்கிரியில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தேனியைச் சேர்ந்த பாண்டியன்(40) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இம்மலையில் கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன், ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த சுப்பா ராவ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

பேரூர் ஆதீனத்திடம் ஆசி பெற்ற அண்ணாமலை

image

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்றார். இதில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவையில் போட்டியிட இன்று அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 25, 2024

வெள்ளியங்கிரி மலையில் 2 பேர் உயிரிழப்பு

image

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று (மார்ச்.24 ) கிரிமலை யாத்திரை சென்ற சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் உயிரிழந்தார். இதேபோல் ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியை சுப்பா ராவ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

கோவையில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

image

கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

கேரள ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

image

கோவை வழியாக செல்லும் கேரள ரயில்கள் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்தான செய்தி குறிப்பில், மார்ச் 26, 28, 30 ஆம் தேதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் வருவது தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 24, 2024

தேர்தல் பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. அதன்படி நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் இன்று (மார்ச்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

News March 24, 2024

அதிமுக வேட்பாளர் நாளை மனுதாக்கல்

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசாவும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாளை (மார்ச். 25) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

News March 24, 2024

ரயில் நான்கு நாட்களுக்கு ரத்து

image

நாகர்கோவில் – கோவை ரயில் சேவை இன்று (மார்ச். 24) முதல் நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 24, 25, 26, 27 உள்ளிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!