Coimbatore

News May 16, 2024

கோவை: பழைய பேருந்துகள் படிப்படியாக நிறுத்தம்

image

போக்குவரத்து கழக கோவை மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளை படிப்படியாக நிறுத்திவிட்டு புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொதுமேலாளர் ஸ்ரீதரன் இன்று தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

கோவை: ரயில் பயணிகள் கவனத்திற்கு..!

image

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று(மே 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வழியாக இயக்கப்படும் நிஜாமுதீன் கொச்சுவேலி வாராந்திர ரயில் 01.07.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயணிக்கலாம். மேலும் திப்ருகர் முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில் 03.07.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

16 காவல்துறை வாகனங்களை ஏலம்!

image

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வரும் 30.05.2024 அன்று காலை 10 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என எஸ்பி பத்ரிநாராயணன் இன்று(மே 16) தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

கோவை : ஜூன் 10ல் கொப்பரை கொள்முதல் நிறைவு

image

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. 31500 மெட்ரிக் டன் கொப்பரை, 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி கொப்பரை கொள்முதல் நிறைவு பெறுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

300 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது!

image

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று(மே 15) பெய்த கனமழை காரணமாக மரம் இன்று(மே 16) மரம் சரிந்து விழுந்தது. பழமை வாய்ந்த மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 16, 2024

கோவைக்கு ரெட் அலர்ட்!

image

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இன்று(மே 16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

விவசாயிகளுக்கு கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

பயணத்தின்போது உயிரிழந்த பெண் ஐடி ஊழியர்

image

சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று நேற்று(மே 15) காலை கோவை காந்திபுரம் வந்தது. இளம்பெண் ஒருவா் மட்டும் படுக்கையிலேயே இருந்துள்ளாா். அவருடன் வந்தவா்கள் அவரை தட்டி எழுப்பியபோது உயிரிழந்தது தெரியவந்தது. விரைந்து வந்த காட்டூர் போலீசார் விசாரிக்கையில், உயிரிழந்தவா் குனியமுத்தூரை சோ்ந்த ஐடி ஊழியர் மகாலட்சுமி என்பதும், உடல் நலக்குறைவால் ஊருக்கு வந்ததும் தெரிந்தது.

News May 16, 2024

தொழிற்பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி நேற்று(மே 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ/மாணவியர் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

வேளாண் பல்கலையில் நீச்சல் பயிற்சி முகாம்

image

கோவை வேளாண் பல்கலை. மாணவர் நல மையம் சார்பில் கோடைகால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் மே 18ம் தேதி துவங்குகிறது. தினசரி காலை, மாலை வேளைகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற உள்ளது. வெளிநபா்களுக்கு ரூ.3,068, பல்கலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.2,006 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 99405 15222 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!